மன்னாரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_287.html
மன்னார் மடுப்பகுதி வன விலங்கு காட்டு பகுதிக்குள் சட்டவிரோதமாக மரம் வெட்டிச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவரை மடு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவத்தினர் ஒரு சிலர் மன்னார் மடுப்பிரதேச வன விலங்கு காட்டுப் பகுதிக்குள் நுழைந்து சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் இவர்களை தடுத்து நிறுத்தி பரிசோதிக்க முற்பட்ட போது ஒருவரைத் தவிர மற்றையோர் தப்பி ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இராணுவச் சிப்பாயை மன்னார் பதில் நீதிவான் இம்மானுவேல் கயஸ் பல்டானோ முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
