ஜனாதிபதியின் உறுதிமொழிக்கு இணங்க தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை
http://weligamanewsblog.blogspot.com/2015/05/37.html
இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 37 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து படகுகளும் இன்று விடுவிக்கப்படவில்லை.
கடந்த 12 ஆம் திகதி தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் சிலருடன் நடைபெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறித்த 37 மீனவர்களையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.
அத்தோடு,
மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை இரு நாடுகளும் தொடர வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.
இதேவேளை,
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கரிசனை கொண்டுள்ளதை தமிழக மீனவர்கள் வரவேற்றுள்ளனர்.
