திருடப்பட்ட வங்கி ஆவணங்கள்: நாடாளுமன்றம் அதிரடி முடிவு
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_251.html
சுவிட்சர்லாந்து வங்கியில் திருடப்பட்ட ஆவணங்கள் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க சுவிஸ் நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸின் ஹெச்.எஸ்.பி.சி(HSBC) வங்கியில் பணியாற்றிய Hervé Falciani என்ற முன்னாள் பணியாளர் வங்கியில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்களை திருடி வெளியிட்டதால், வங்கியில் நடந்த வரி ஏய்ப்பு விவகாரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வங்கி கணக்குகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் வெளியே திருடப்பட்டதால், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த சுவிஸ் மந்திர சபை கடந்த புதன் கிழமை கூடியது.
முக்கிய அமைச்சர்கள் நடத்திய இந்த ஆலோசனை கூட்டத்தில், திருடப்பட்ட ஆவணங்களில் உள்ள தகவலை தெரிந்துகொள்ள சர்வதேச நாடுகள் நெருக்கடி கொடுத்துவருவது குறித்து விவாதிக்கப்பட்டது.
வங்கி கணக்குகள் குறித்து பிற நாடுகளின் கோரிக்கையை எதிர்கொள்வது சுவிஸ் அரசிற்கு பெரும் சவாலாக உள்ளதாக அரசு அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுவிஸ் வங்கியில் வைக்கப்பட்டுள்ள கணக்குகள் குறித்த தகவல்களை பெரும் முயற்சியில் ஆண்டுக்கு சுமார் 1,500 கோரிக்கைகள் சுவிஸ் அரசிற்கு வருகிறது.
இதனால், சர்வதேச அளவில் வங்கி கணக்குகள் குறித்து அடிக்கடி தொடர்பு கொள்ளப்படுவதில் முன்னணி நாடுகளில் ஒன்றாக சுவிஸ் திகழ்கிறது.
சர்வதேச அளவில் தொடர்ந்து வலுக்கும் அழுத்தத்தின் காரணமாக சுவிஸ் சட்ட அம்சத்தில் திருத்தத்தை ஏற்படுத்தலாமா என அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
