பாணந்துறையில் பெண் வர்த்தகர் குத்திக் கொலை
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_283.html
பாணந்துறை ஹிரண பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்குள் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
45 வயதான வர்த்தக நிலைய உரிமையாளரான பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் நேற்றிரவு வர்த்தக நிலையத்திலிருந்து வீடு திரும்பாததால் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதற்கமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இன்று அதிகாலை வர்த்தக நிலையத்திற்குள் இருந்து சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
