கடுவலை - மாலபே வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி (படங்கள்)
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_938.html
கடும் மழையுடன் கூடிய காலனிலை காரணமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் விபத்துக்களும் வாகனப் போக்குவரத்துக்குத் தடையும் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை மாலபே தொழினுட்பக் கல்லூரிக்கு முன்பாக பிட்டுகல சந்தியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். இதன் போது முச்சக்கர வண்டிகள் இரண்டு, மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மற்றும் சிறிய ரக லொறி ஒன்றுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே மரணமாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு மரம் முறிந்து விழும் சந்தர்ப்பத்தில் அதனுடன் சேர்ந்து மேலும் இரு மரங்கள் விழுந்ததாலேயே சேதங்கள் அதிகரித்துள்ளதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Picuters - NewsFirst


