நான் பொது பல சேனாவில் இருந்து விலகிவிட்டேன் - அதன் தலைவர் விமலஜோதி தேரர்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_112.html
தான் பொது பல சேனா அமைப்பின் தலைமைப் பதவியில் இருந்தும் பொது பல சேனா இயக்கத்தில் இருந்தும் விலகிவிட்டதாக அதன் தலைவர் கிரம விமலஜோதி தேரர் குறிப்பிட்டுள்ளார்.
பெளத்த சாசனத்துக்கான சேவைகளை தொடர்வதே எனது குறிக்கோள். அரசியலில் ஈடுபடுவடுவதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது பல சேனா செல்லும் பாதை எனக்குப் பொருத்தமானதல்ல எனத் தெரிவித்து அந்த அமைப்பில் இருந்து தான் விலகிக் கொள்வதாக அதன் செயலாளர் பயங்கரவாதி ஞானசாரவுக்கு தான் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் சர்வதேச பெளத்த பயங்கரவாதியான அசின் விராதுவை வரவழைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியுடன் தான் இது தனக்குப் பொருந்தாது என தாம் உணர்ந்ததாகவும் இதனால் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தற்போதைய பொது பல சேனா அமைப்பு பெளத்தர்களுக்கான சேவையைச் செய்யவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் பொது பல சேனாவின் ஆரம்ப காலம் திருப்தியாக இருந்தது. எனினும் காலப்போக்கில் எல்லாம் மாறிப் போய்விட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் பொது பல சேனா இயக்கத்துடனோ அல்லது வேறு எந்த இயக்கங்களுடனோ இணையப் போவதில்லை என்றும் விமலஜோதி தேரர் குறிப்பிட்டார்.