சுற்றுலா சென்ற பஸ் மீது காட்டுயானை தாக்குதல்

பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு கல்விச்சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களின் வாகனத்தின் மீது காட்டுயானை தாக்கியதில் ஒரு மாணவியும் இரண்டு ஆசிரியைகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹிங்குராங்கொடை ஆனந்த மகளிர் கல்லூரியின் மாணவர்கள் பயணித்த வாகனத்தை காட்டு யானை 23.05.2015 அன்று காலை தாக்கியுள்ளது.

இச் சம்பவம் தம்புள்ளை, திகம்பதாவ என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட வாகனத்தில் 12 மாணவிகள் இருந்துள்ளனர். அதில் சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதுடன் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த சில தினங்களில் இவ்வாறு மூன்று சம்பவங்கள் இடம்பெற்றள்ளமை குறிப்பிடத்தக்கது.





Related

Local 975220624040394316

Post a Comment

emo-but-icon

item