சுறாக்களை வளர்த்ததை ஒப்புக்கொண்டார் கோட்டாபய
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_335.html
மன உளைச்சல்களை தீர்த்து கொள்வதற்காக சுறாக்கள் இருக்கும் பெரிய மீன்தொட்டியொன்றை வைத்திருந்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த காலங்களில் கோத்தபாய ராஜபக்சவின் மீன்தொட்டி குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வந்தன.
இது தொடர்பில் அவர் ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அநேக வீடுகளில் செல்லப்பிராணிகளாக மீன்களை வளர்த்து வருகின்றனர். மீன் தொட்டிக்கும், சுறா மீன்களை கொண்ட தொட்டிக்கும் இடையில் காணப்படும் வித்தியாசம் என்ன? வீடுகளில் பறவையினங்களை வளர்ப்பதில்லையா?
ஏன் இவ்வாறான விடயங்களில் எம்மீது மாத்திரம் விரல் நீட்டி வருகின்றீர்கள் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கேட்டுள்ளார்.
விஷேட பறவையினங்கள் என்னிடமில்லை. அரச ஊழியர் ஒருவருக்கு மீன்தொட்டியொன்றை வைத்துக்கொள்ளமுடியாதா என்ன?
அக்காலத்தில் அந்த மீன்களே எனக்கு ஆறுதல் வழங்கின. இவை எல்லாம் எவ்வாறு நடந்தது என்பதை விபரிக்க எனக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்.
சேர் நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால் காரியாலயத்திலேயே இருப்பீர்கள் வேறெங்கும் இருக்கமாட்டீர்கள் என என்னை பார்த்து நபரொருவர் குறிப்பிட்டார்.
வீட்டில் மீன்தொட்டியொன்றை வளர்த்தல் மனதிற்கு ஆறுதலை கொடுக்கும் எனவும், அதனால் உங்களின் மன உளைச்சல்களிலிருந்து விடுதலை பெறலாம் எனவும் அந்நபர் என்னிடம் தெரிவித்தார்.
அது மிக பெரிய மீன்தொட்டி. அதை என் வீட்டிற்கு கொண்டு வந்த நாள் முதல் பல வருடங்களாக அங்கு சகல நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்தவர் அவரே என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அவர் என் வீட்டிலில்லை. அவர் அநேகருக்கு மீன் தொட்டிகளை வழங்கியுள்ளார்.
எங்களால் கைப்பற்றப்பட்ட சமாதானம், உறுதி செய்யப்பட்ட அபிவிருத்தி, ஆகியவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இது அவசியமற்றதொன்றாகிவிடும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
