பஸ்ஸில் இருந்து விழுந்த தாயும் மகனும் காயம் (படங்கள்)
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_230.html
பொகவந்தலாவையிலிருந்து ஹற்றன் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் மிதிபலகையிலிருந்து தாய் ஒருவரும் அவருடைய பிள்ளையும் தவறி விழுந்து பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இவ்விபத்து இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தாய் தனது பிள்ளையுடன் பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



