பொலிஸ் உத்தியோகத்தரின் பார்வையைப் பறித்த டேவிட் மில்லர்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_209.html
ஐ.பி.எல் போட்டிகளின் போது கல்கட்டா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியின் போது பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பார்வை பறிபோயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
டேவிட் மில்லர் அடித்த பந்து வேகமாக வந்து எல்லைக் கோட்டினருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தினரின் கண்ணில் பட்டதால் அவர் காயமடைந்தார். இதனால் உடனே வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதும் அவரது பார்வை பறிபோயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் இச்சம்பவத்தால் மனமுடைந்து போன டேவிட் மில்லர் தனது ஆழ்ந்து கவலையைத் தெரிவித்துள்ளதுடன் குறித்த பொலிஸ் உத்தியோகத்தினருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உதவிகளை வழங்கவும் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
