கன்டேனருடன் மோதியது யாழ்தேவி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_985.html
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த யாழ்தேவி புகையிரதம் ஹுனுப்பிட்டிய ரயில்வே கடவையில் வைத்து கொள்கலன் (கன்டேனெர்) ஒன்றுடம் மோதியுள்ளது.
இதனால் ரயிலின் எஞ்சினுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சேதமடைந்த எஞ்சினிற்குப் பதிலாக வேறொரு எஞ்சினைப் பொருத்தி பயணம் மேற்கொள்ளப்படும் என்றும் சேதமடைந்த எஞ்சின் மரதானை நோக்கி இழுத்து வரப்படும் எனவும் ரயில்வே கடுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

