கோட்டாவை போல் மஹிந்தவும் நீதிமன்றம் செல்ல திட்டம்!
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_184.html
தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபடத் எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்துகம - பெலவத்த பகுதியில் இடம்பெற்ற சமய நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதேவேளை, மங்கள சமரவீரவிடம் 100 கோடி நட்டஈடு கோரி மஹிந்த ராஜபக்ஷ சட்டக் கடிதம் அனுப்பியுள்ளதோடு, ரவி கருணாநாயக்க மஹிந்த ராஜபக்ஷவிடம் 2000 மில்லியன் நட்டஈடு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

