ஆணையாளர் நியமனம் ஜனநாயக விரோத செயல்- டிலான்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_173.html
மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் காணப்படும் போது, உள்ளுராட்சி சபைகளின் நடவடிக்கைகளை ஆணையாளர் ஒருவரின் கீழ் கொண்டுவருவது ஜனநாயக விரோத செயல் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
தேர்தலைப் பிற்போடத் தேவை உள்ளதாக இருந்தால், மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கே, தொடர்ந்தும் அதன் கால எல்லையை நீடித்து கொண்டு செல்ல அதிகாரத்தை வழங்கியிருக்கலாம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். (DC)

