பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களுக்காக..!

புதிய கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்களை இணையத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 இலங்கையில் முதன் முறையாக இந்த வசதி இவ் வருடம் முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். 

 இதன்படி WWW.UGC.AC.lk என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் மூலம் இந்த வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும். இதேவேளை இம் மாதம் 29ம் திகதி விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ZN)


Related

Local 4930304151336111543

Post a Comment

emo-but-icon

item