கண்டி-மஹியங்கனை வீதியில் விபத்து - இரண்டு பொலிஸார் பலி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_169.html
கண்டி - மஹியங்கன வீதியில் உடுதும்பரைப் பிரதேசத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸார் பயணம் செய்த வான் ஒன்று டிப்பர் ஒன்றுடன் மோதிய போதே இச்சோகச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டி கலகா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு உத்தியோகத்தர்களே மரணமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் டிப்பர் வாகனத்தின் சாரதி தலை மறைவாகியுள்ளதாகவும் அவரைத் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
