யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களிலும் திரிபு படுத்தப்பட்ட தேசியக் கொடிகள்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_141.html
அண்மையில் மாத்தறையில் நடைபெற்ற யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களிலும் திரிபுபடுத்தப்பட்ட தேசியக்கொடி பாவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் டளஸ் அலஹப்பெரும குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சி.ஐ.டியினர் விரிவான விசாரணை ஒன்றினையும் நடத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அண்மையில் கொழும்பில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் திரிபுபடுத்தப்பட்ட தேசியக் கொடி பாவித்தமை சம்பந்தமாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதோடு முன்னாள் அமைச்சர் டளஸ் மீதும் இது சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
