ஆற்றைக் கடக்க முற்பட்டவரைக் காணவில்லை

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனமடு ஆற்றை கடப்பதற்கு முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று உறவினர்கள் தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். 

வந்தாறுமூலை பேக் ஹவுஸ் வீதி பலாச்சோலையைச் சேர்ந்த கந்தையா பத்மநாதன் (வயது 55) என்பவரே நேற்று வியாழக்கிழமை இரவு ஆற்றில் காணாமல் போயுள்ளார். உறவினர்களும் ஊர்மக்களும்; பொலிஸாரின் உதவியுடன் இவரை தேடி வருகின்றனர். 

கடந்த 4 மாதகாலத்துக்குள் சந்தனமடு ஆற்றில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related

Local 1073720398664994029

Post a Comment

emo-but-icon

item