எட்டு வருடங்கள் ஆணாக நடித்துக் குடும்பம் நடத்திய பெண் கைது - வெலிகமையில் சம்பவம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_114.html
ஆணாக நடித்து சுமார் எட்டு வருடங்கள் வெலிகம உடுக்காவ பிரதேச பெண் ஒருவருடன் குடும்பம் நடத்திய பெண் ஒருவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களைடையே ஏற்பட்ட பிணக்கை விசாரிக்கச் சென்ற வேளையிலேயே இது சம்பந்தமாகத் தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண் ஒரு ஆணாக நடித்து சுமார் 8 வருடங்கள் குடும்பம் நடத்தி வந்துள்ளார் என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் தனது அடையாள அட்டை மற்றும் ஏனைய ஆவணங்களையும் ஆண் ஒருவரின் பெயரில் போலியாகத் தயாரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அவர் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 6ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
