இந்தியாவில் அதிகரித்த வெப்ப நிலை காரணமாக 1100 பேர் பலி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/1100.html
இந்தியாவின் கடந்த சில தினங்களாக நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக 1100 பேர் மரணமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் ஆந்திரா மற்றும் தெழுங்கானா ஆகிய மா நிலங்களிலேயே இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
அங்கு சூழல் வெப்ப நிலை 48 செல்ஸியஸைத் தாண்டியுள்ளதாகவும் இதனால் பொது மக்கள் கடும் பாதிப்புக்குட்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகளும் வீடுகளற்றவர்களுமாவர்.
இந்த அசாதாரண கால நிலை மேலும் இரண்டு தினங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
