டுபாயிற்குக் கடத்த முயன்ற 97 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்கள் சிக்கின
http://weligamanewsblog.blogspot.com/2015/05/97.html
சுமார் 97 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்களை சட்டத்துக்கு முரணான வகையில் இலங்கையில் இருந்து டுபாயிற்குக் கடத்த முற்பட்ட ஒருவரை கட்டுனாயக்க விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
45 வயதான இந்தியப் பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிகரட் பெட்டி ஒன்றில் வைத்து குறீத்த இரத்தினக்கற்களைக் கடத்துவதற்கு அவர் முற்பட்டுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட இரத்தினக்கற்கள் 200 கரட் அளவுடையது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
