புங்குடுதீவு வித்தியா - சிறப்புக்கட்டுரை
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_922.html
இச் செய்தியானது வடக்கு மாகாணமெங்கும் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. இம்மிலேச்சத்தனமான படுகொலையையிட்டு வடக்கின் பல பிரதேசங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களிலும் சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சமூக நல அமைப்புகளும் பிரபல அரசியல் கட்சி தலைவர்களும் தத்தமது கண்டனங்களையும் எதிர்ப்புக்களையும் இந்நிலையில் எல்லாவித செய்தி ஊடகங்களும் முகனூல் பதிவாளர்களும் இந்த மாணவியின் கொலை தொடர்பாக பல கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
மாணவி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பெற்ற வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவர்கள் மூவரும் கொலை செய்யப்பட்ட மாணவியின் உறவினர்கள் எனவும் குடும்ப பகையே இக்கொலைக்கு காரணம் எனவும் சொல்லப்படுகின்றது.
யாழ் மாவட்ட பா. உறுப்பினர்களான டக்லஸ் தேவானந்தா, மாவை, சேனாதிராசா, சி.சிaதரன் வடக்கு மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் உட்பட மக்கள் பிரதிநிதிகளும் வித்தியாவின் இறுதி நிகழ்விற்கு வந்து இறுதி விடை கொடுத்தனர்.
இந்த வித்தியாவின் கொலைக்கு காரணமானவர்களென சந்தேகத்தின் பெயரில் கைதாகியுள்ள குற்றவாளிகளுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜர் ஆக கூடாது என யாழ். பல்கலைக்கழக சமூகம் சபதம் எடுத்துள்ளது. புங்குடுதீவு மாணவியின் படுகொலை நீதி கோரி யாழ். பல்கலைக்கழக சமூகத்தால் மேற்கொள்ளப்பட்ட கண்டன போராட்டத்தின் பின்னரே யாழ். பல்கலைக்கழக சமூகம் அவ்வாறு சபதம் எடுத்துக்கொண்டது. அத்துடன் அவ்வாறான குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜர் ஆகும் சட்டத்தரணிகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியான மாபெரும் போராட்டத்தினை முன்னெடுப்போம் எனவும் பல்கலைக்கழக சமூகம் எச்சரித்துள்ளது.
இக்கொலை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சி. சிaதரன் வடக்கு மாகாண பிரதிபொலிஸ் மாஅதிபருக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் “வடக்கில் காணப்படும் குற்றங்களோடு தொடர்புடையவர்கள் சம்பந்தமாக பொலிஸ் எடுக்கின்ற நடவடிக்கைகளில் மீது கேள்வி எழுந்துள்ளது. “இத்தகைய கொடூரமான வெறித்தனமான குற்றவாளிகளால் மேற்கொள்ளப்படும் சம்பவங்களால் வடக்கு மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது” என்கிற அரசாங்கத்தை நோக்கிய சகட்டு மேனித்தனமான குற்றச்சாட்டுக்களே இடம்பெற்றுள்ளன.
கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னரும் யாழ்ப்பாணத்திலே ஒரு பெண் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்னர் கூட வன்னியிலும் இதுபோன்ற சரண்யா என்னும் பெற்றோரை இழந்து பதினாறு வயது மாணவி ஒருத்தி பாலியல் வன்முறைக் குள்ளாக்கப்பட்டு பின்னர் இறந்து போனார். ஆனால் இந்த கொலைகளெல்லாம் இதுபோன்று அதிக கவனம் பெறவில்லை. வெட்டிகொல்லப்பட்ட பெண் கணவனை இழந்தவள் என்பதும் அவள் இளைஞன் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தாள் என்பதும் அவளைப் பற்றி வெளிவந்த செய்திகள்.
இதனூடாக எமது சமூகத்தின் பார்வையில் உண்டாக கூடிய அவள் குறித்த “கீழ் தர” எண்ணமும் அவள் ஏதோ ஒரு வகையில் தண்டிக்கப்பட வேண்டியவள்தான் என்கின்ற வரட்டு மனநிலையும் அந்த மெளனத்துக்கு காரணமா யிருக்கலாம்.
வன்னி சிறுமி சரண்யா ஒரு ஏழை. ஆதரவற்றவள் என்பதனால் அவளது கொலை பற்றிய கேள்விகள் போதியளவு எழுவில்லை.
ஆனாலும் பின்னர் அக்கொலையில் தலையிட்ட மனிதாபிமான செயற்பாட்டாளர்களின் முயற்சியால் அக்கொலை குறித்த விசாரணைகள் பின்னர் முடுக்கிவிடப்பட்டன. எப்படியோ இதுவரை காலமும் இத்தகைய சம்பவங்களின் போது இடம்பெறாத கவனயீர்ப்பு இந்த வித்தியாவின் கொலையின் பின்னராவது இடம்பெற்றிருப்பது நின்மதியை தருகின்றது. ஆனால் இந்த வக்கிர எண்ணம் கொண்ட இளைஞர்களின் உருவாக்கம் எதிலிருந்து தொடங்குகின்றது? இவர்கள் எப்படி இத்தகைய கொடுமைகளை மிக மிக சாதாரணமாக செய்துவிடும் மனோநிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்?
இத்தகைய பாலியல் வன்முறைகளுக்கும் கொலைக ளுக்கும் பின்னணியில் இருந்து செயல்படும் எமது சமூக உறவுகளின் தாக்கம் எத்தகையது? எமது கலாசாரம், பண்பாடு என்கின்ற பெயர்களில் கட்டிக் காக்கப்படும் சாதிய ஆணாதிக்க தடிப்புகளும், சண்டித்தனங்களும் இத்தகைய மிலேச்சத்தனங்க ளுக்கு எப்படி துணை புரிகின் றன? என்கின்ற கேள்விகளை நாம் ஒருபோதும் கேட்பதில்லை.
பொலிஸ் தரப்பு பதிவுகளுக்கு அப்பால் இது பற்றிய ஆய்வுக ளோ தரவுசேகரிப்புகளோ எமது சமூகமட்டத்தில் இல்ல வேயில்லை. தம்மை சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களோ சிவில் சமூக பிரதிநிதிகள் என்று தேர்தல் காலங்களில் மட்டும் தலை காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு குஞ்சம்கட்ட பாதிரிமாரோடு இணையும் அரைவேக்காட்டு புத்திஜீவிகளோ இத்தகைய முயற்சிகளில் இறங்குவதேயில்லை. அவர்க ளுக்கு அது அவசியமானதொரு பணியாக தெரிவதில்லை.
அது பற்றி அக்கறை கொள் பவர்களை எமது சமூகம் வீணர்கள், பிழைக்கத் தெரியா தவர்கள் என்கின்ற பட்டம் கொடுத்தே கெளரவிக்கின்றது. ஏதோ பிறந்தோமா படித்தோமா முடிந்தவரை உழைத்தோமா என்று செக்குமாட்டுதனமாக செயல்படுபவர்களே எமது சமூகத்தின் மதிப்புக்குரிய வர்களாகின்றார்கள். இந்த இழிநிலை எப்போது நீங்குகின் றதோ அப்போதுதான் தமிழ் சமூகத்தில் ஒரு பொதுநல அக்கறைகொண்ட சிவில் கட்டமைப்பு துளிர்க்கமுடியும்.
அதுவரை “எரிகின்ற வீட்டில் முடிந்தவரை பிடுங்கியது இலாபம்” என்னும் கொள்கை கொண்ட கூட்டமைப்பு தலை வர்களே எம்மை வழிநடத்து வார்கள். இல்லாவிட்டால் அமைச்சர் ஐங்கர நேசன் வித்தியாவின் கொலைக்கு புலிகள் இல்லாமையே காரணம் என்று பேசியிருக்கமாட்டார். புலிகளின் காலத்தில் பெண்கள் இரவில்கூட சுதந்தரமாக நடமாடினார்களாம். எனவே புலிகளின் வரவுக்காக மக்கள் மீண்டும் காத்திருக்கின்றார்களாம்.
ஒரு பொறுப்புவாய்ந்த அமைச்சர் பேசுகின்ற பேச்சா இது? அது புலிகளின் நல் லாட்சியின் வெளிப்பாடு அல்ல. ஒரு மயான அமைதி யினை மக்கள் சுதந்திரமாக வாழ்ந்ததன் ஆதாரமாக திரிபுப டுத்த முடியாது. ஒரு நீதிமானின் அமைச்சரவையிலே அங்கம் வகிக்கும் ஒருவர் இப்படி பொய்சாட்சி சொல்லலாமா?
எந்த மக்கள் இவரிடம் புலிகள் மீண்டும் வர காத்தி ருக்கின்றோம் என்று இருந்தனர்? வயிற்றுப்பிழைப்புக்காக சுட்டுவிற்ற அப்பத்துக்கும் புலிகளுக்கு வரிகட்டிய ஏழைத் தாயா? பெற்றமகனை புலிகளின் ஆள்பிடிக்கு பறிகொடுத்த ஏக்கத்தில் பரிதவித்து செத்த தந்தையின் ஆன்மாவா? துரோகி என்றும் சமூக விரோதி என்றும் புலிகள் மின்கம்பத்தில் கட்டி தூக்கப்பட்ட தமிழ்மகனின் பரம்பரையா? பருவமடையா வயதிலே புலிகளால் கடத்தப் பட்டு பயிற்சி முகாம்களில் நரக வேதனையை அனுபவித்து கரும்புலிகளாய் மாண்டுபோன சிறுமிகளின் சகோதரர்களா? எந்த மக்கள் இவரிடம் புலிகள் மீண்டும் வர காத்திருக்கின்றோம் என்று இருந்தனர்.
இத்தகைய உரைகளுக்கு தடை விதிக்குமாறு நீதிமன் றங்களை அணுக வேண்டும். குறைந்த பட்சம் ஊடக தர்மம் என்பது பற்றிய எந்தவித அறிவும் இலங்கை செய்திகளை மையமாக கொண்டு செயல் படும் செய்தி ஊடகங்களை நடத்துபவர்களில் பெரும்பா லானோருக்கு இல்லை என்பதை கடந்த சில நாட்களாக இணையத்தளங்களில் வித்தி யாவின் படங்கள் பட்டபாடும் அது குறித்து வெளியான ஆபாச தலைப்புகளும் சொல்லி நிற்கின்றன. மேற்கு நாடுகளில் இதுபோன்ற சம்பவங்களின் போது ஒருபோதும் இப்படி யான புண்ணாக்குத்தன ஜேர்னலிசம் செய்ய முடியாது. ஏன் இந்தியாவில் கூட இது போன்ற பாலியல் வன் முறை கொலைகளுக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண்களின் படங்களை வெளியிடுவது சட்டரீதியாக தடை செய்யப் பட்டேயுள்ளது.
மறுபுறம் எடுத்ததற்கெல்லாம் அரசாங்கத்தையும் ஆமியையும் குற்றம் சொல்லி சொல்லியே வருவதன் அறுவடைதான் மூன்று இளைஞர்கள் அதுவும் சகோதரர்கள் இதுபோன்ற குற்ற செயல்களில் திட்டமிட்டு ஈடுபடும் தைரியத்தை வழங்குகின்றது. எது நடந்தாலும் எமது சமூகத்தின் வண்டவாளங்களையெல்லாம் மூடிமறைத்து தமிழனின் “புனிதத்தை” பாதுகாக்கும் தலைவர்கள் இருக்கும் வரை வித்தியாவையும் சரண்யாவையும் கொலை செய்யும் பாதகர்கள் பயப்பட போவதில்லை. இதுபோன்ற கொலைகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகளின் விடுகின்ற தூரநோக்கற்ற அறிக்கைகளும் செயல்பாடுகளும் மறைமுகமாக அல்ல நேரடியாகவே இந்த கொலை குற்றவாளிகளை பாதுகாக்ககின்றது.
இவர்கள்தான் அந்த அவர்கள்
மாணவி வித்தியா கொலை வழக்கில் கைதாகியுள்ள பிரதான சந்தேக நபர்கள் இவர்கள்தான். பொலிஸ் விசார ணைகள் பெரும் பாலும் முடிவு கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், இவர்கள் குற்றங்கள் தெளிவாக நிரூபண மாகியுள்ளமை குறிப் பிடத்தக்கது.
நடந்ததென்ன?
புங்குடுதீவில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை வைத்திய பரிசோதனைகள் உறுதி செய்துள்ளன. புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா (18) என்ற மாணவிக்கு இந்த கொடூரம் நிகழ்த்துள்ளது. அவர் கூட்டு வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வைத்தி யர்கள் கருதுகிறார்கள். இதன் மூலம், கும்பலொன்று திட்டமிட்ட ரீதியில் இந்த கொடூரத்தை புரிந்துள்ளது உறுதி செய்யப்படுகிறது.
பாடசாலை விட்டு திரும்பிய மாணவி வீடு திரும்பவில்லை. வீட்டிற்கும் பாடசாலைக்குமிடையில் இருந்த சிறிய பற்றைக்காடு போன்ற பகுதியில் தான் அவர் கடத்தப்பட்டு, வல்லுறவிற்குள் ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார். எனினும், அந்த சமயத்தில் இதனை யாரும் பெரிய விடயமாக பொருட்படுத்தவில்லை. மகள் மாலை மங்கியும் வீடு திரும்பாததால் குழப்பமடைந்த பெற்றோர், நெடுந்தீவு பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர். முறையிட சென்ற தந்தையை எகத்தாளமாக பார்த்த பொலிஸார் “காதலித்த பொடியனுடன் ஓடியிருப்பாள். காலமை வந்திடுவாள்” என கூறி அனுப்பியுள்ளனர்.
பொலிஸாரின் இந்த பொறுப்பற்ற நடத்தையும் கொலைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திவிட்டதென்பதே மக்களின் கொதிப்பாக உள்ளது.
மறுநாளாகியும் மகள் வராதநிலையில் பெற்றோர் குழப்ப மடைந்துள்ளனர். இந்த சமயத்தில்தான், அவர்களது வீட்டிற்கும் பாடசாலைக்குமிடையிலிருந்த காட்டுபகுதியில் கொல்லப்பட்ட மாணவியின் கால் செருப்பை சிலர் கண்டுள்ளனர். விடயம் காட்டுத்தீயாக பரவியதையடுத்து, அங்கு தேடுதல் நடத்தப்பட்டது.
இதன்போது அங்கிருந்த அலரிமரத்தில் மாணவியின் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். அவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதற்கான தெளிவான அடையாளங்கள் சம்பவ இடத்திலேயே காணப்பட்டன.
சம்பவ இடத்தை ஆராய்ந்த தீபம் செய்தியாளர். அங்கு மாணவி பல மணிநேரமாக கடத்தி வைத்திருக்கப்பட்டு சித்திரவதை அல்லது திட்டமிட்ட பலமணி நேர வல்லுறவு நிகழ்ந்திருக்கிறதென கூறுகிறார்.
மாணவியின் உடலிலும் கொடூரமான சித்திரவதைக்கான தடயங்கள் காணப்படுகின்றன. அவர் கட்டிவைக்கப்பட்டு கொடூரமாக காமகர்களால் சீரழிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படும் இந்த பகுதி வாலிபன் ஒருவனிலும் பொலிஸாரின் கவனம் திரும்பியுள்ளது.
நன்றி-தினகரன்

