இன்னும் 3 வாரங்களில் பாராளுமன்றம் கலைகப்படும் - லக்ஷ்மன் கிரியல்ல
http://weligamanewsblog.blogspot.com/2015/05/3_24.html
இன்னும் மூன்று வாரங்களில் பாரளுமன்றம் கலைக்கப்படும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். உடுனுவர பிரதேசத்தில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அடுத்த தேர்தலின் பின்னர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் ஒரு முறை நாட்டை ஆட்சி செய்ய வழி செய்யுமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் சம்பந்தமாக விசாரிக்கும் போது சிலர் அவர்களைப் பழி வாங்குவதாகத் தெரிவிக்கின்றனர். அது பிழையானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முன்னாள் அமைச்சர்கள் போவது போலிக் குற்றச்சாட்டுகளுடன் அல்ல. அவர்கள் தங்களது வரவை மீறீய சொத்துக்கள சேகரித்துள்ளனர். அவர்களுக்கு இவற்றுக்கான பணம் எங்கிருந்து வந்தது என விசாரணை செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
