ஐபிஎல் சீசன் 8: சென்னையை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/8_20.html
ஐபிஎல் சீசன் 8ன் இன்றைய ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது.
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.
எனவே மும்பை இந்தியன்ஸ் அணி 25 ரன்கள் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
