யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_687.html
யாழ்ப்பாணம் கைட்ஸ், புதுக்குடித்தீவு பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் சில மனித மிருகங்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அப்பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த மாணவியின் கொலை சம்பந்தமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மரண தண்டனை வழங்குமாறு அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
