மஹிந்த சுதந்திர முன்னனியில் போட்டியிட்டால் 43 பேர் ஐ.தே.க வில் இணையவுள்ளனர்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஏனைய சிறு கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இவ்வாறு போட்டியிடும் சந்தர்ப்பத்தில் யானைச் சின்னத்தில் அல்லாது அன்னச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என ஏனைய கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. எனினும் சின்னம் பற்றிய எந்த முடிவும் இது வரை எடுக்கப்படவில்லை என ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் அனுமதி வழங்கப்பட்டால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் 43 பேர் கூட்டணியுடன் இணைந்துகொள்ள தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களை ஆதாரம் காட்டி சிங்கள வார இதழொன்று அறிவித்துள்ளது


Related

Local 3243849078961908441

Post a Comment

emo-but-icon

item