இறப்பர் மரம் தலையில் வீழ்ந்ததில் 15 வயது சிறுவன் பலி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/15_24.html
களுத்தரை கிராமப்புரத்தை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனின் தலையில் இறப்பர் மரம் வீழ்ந்ததில் பரிதாபமாக பலியாகியுள்ளான்.
இம்மாணவன் களுத்துரை வெலாபுர மகா வித்தயாலத்தில் 10ம் தரத்தில் கல்வி கற்பதுடன் இச்சம்பவம் நேற்று மாலை வீட்டிலிருந்து தனியார் வகுப்போன்றிற்கு செல்லும் போதே இடம் பெற்றுள்ளது.
குறித்த மாணவன் கடுமையாக பாதிக்கப்பட்டு களுத்தரை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளான்.
