27 ஆண்டுகளின் பின்னர் நாணயத்தாளில் ஆங்கிலத்தில் கையொப்பம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/27_11.html
27 ஆண்டுகளின் பின்னர் நாணய தாளில் ஆங்கில மொழியில் கையொப்பமிடப்பட்டுள்ளது.
நாணயத்தாளில் நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுனரது கையொப்பங்கள் இடப்படுவது வழமையாகும்.
அந்த வகையில் அண்மையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட நாணயத் தாளில் மத்திய வங்கியின் ஆளுனரது கையொப்பம் ஆங்கில மொழியில் காணப்படுகின்றது.
ஐயாயிரம் ரூபா நாணயத் தாளில் இவ்வாறு கையொப்பமிடப்பட்டுள்ளது.
1988ம் ஆண்டில் மத்திய வங்கியின் ஆளுனராக கடமையாற்றிய நெவில் கருணாரட்ன இதற்கு முன்னர் நாணயத் தாளில் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டிருந்தார்.
அண்மையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட நாணயத் தாளில் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ரவி கருணாநாயக்க சிங்களத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
எனினும், அண்மையில் 2014ம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் மகேந்திரனின் கையொப்பம் சிங்களத்தில் காணப்படுகின்றது.
