பாக்கிஸ்தான் இருபதுக்கு20 அணியில் மீண்டும் சொயிப் மலிக்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/20_20.html
பாக்கிஸ்தானுக்குச் சுற்றுலா மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணிக்கெதிரான 20 ஓவர் போட்டிகளுக்கான அணியில் பாக்கிஸ்தானின் முன்னாள் தலைவரும் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரருமான சொயிப் மலிக் இடம்பெற்றுள்ளார். நீண்ட கால இடைவெளியின் பின்னர் அவருக்கு அணியில் இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் வேகப்பந்து வீச்சாளரான மொஹம்மட் சமிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புது முக வீரரான ஆரம்பத் துடுப்பாட்டக்காரரான நுஃமான் அன்வர் மற்றும் முன்னாள் 19 வயதுக்குக் கீழ் அணியின் தலைவர் இமாத் வஸிம் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் சோபிக்கத் தவறிய சயீத் அஜ்மல் மற்றும் தன்வீர் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதோடு காயத்தால் அவதிப்பட்டு வரும் மக்ஸூத் மற்றும் சொஹைல் கான் ஆகியோரும் அணியில் இடம்பெறவில்லை.
