திவிநெகும 'சிப்தொற' கல்வி புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் - 2015
http://weligamanewsblog.blogspot.com/2015/05/2015.html
திவிநெகும 'சிப்தொற' கல்வி புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் - 2015
அரசின் திட்டங்களினால் இன்று ஏழை மக்கள் பெரும் நன்மை அடைகின்றனர்.
பயன் பெரும் பொது மக்கள் அரசுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதுடன் ஒழுக்கமுள்ள சமூகமாக நாம் திகழ வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தெரிவித்தார்.
திவிநெகும சிப்தொற கல்வி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் சமூர்த்தி பெரும் குடும்பங்களின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு திவிநெகும தலைமைபீட முகாமையாளர் ஏ.எஸ்.எம். நயிமா தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே பிரதேச செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது ஒரு மாணவருக்கு 16,000.00 ரூபா வீதம் 18 மாணவர்களுக்கு காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கணக்காளர் ஏ.எல். நஜிமுடீன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.எல். அஸ்லம், திவிநெகும உத்தியோகத்தர் எம்.எப். நவாஸ் உட்பட உயரதிகாரிகளும் மாணவர்களது பெற்றோர்பகளும் கலந்து கொண்டனர்.






