தெற்கு அதிவேகப் பாதையில் ஒரே இலக்கத்தகடுகளுடன் கூடிய இரு வாகனங்கள் கைது - PHOTO
http://weligamanewsblog.blogspot.com/2016/04/southern-express-highway.html
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஒரே பதிவிலக்கத்தைக் கொண்ட இரண்டு வாகனங்கள் பத்தேகம பரிமாற்றத்தில் வைத்துப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளன.
கொட்டாவ பரிமாற்றந்தில் இருந்து வந்த டாட்டா நனோ ரக வாகனம் ஒன்று வெலிபன்ன பிரதேசத்தில் இன்னுமொரு டாட்டா நனோ ரக வாகனத்தினைக் கடந்து சென்றுள்ளது. கடந்து சென்ற வாகனம் தனது வண்டியின் அதே பதிவிலக்கத்தைக் கொண்டுள்ளதைப் பின்னால் வந்த சாரதி அவதானித்ததையடுத்து உடனே அதிவேக வீதிப் பொலிசாருக்கு தகவலைத் தெரிவித்துள்ளார்.
பின்னர் குறித்த வாகனம் பத்தேகம பரிமாற்றத்தின் மூலம் வெளியேற முற்பட்ட வேளையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளது.
பொலிசார் இது பற்றி விசாரண நடத்திய போது குறித்த வாகனம் களனிய பிரதேசத்தில் இருந்து கூலி அடிப்படியில் பெற்றுக் கொண்ட வாகனம் எனத் தெரியவந்துள்ளது.
Photos: NETH

