புத்தளம் றிஷாத் பதியுதீன் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி - Photos

புத்தளம்,தில்லையடி அல் ஹாசீம் சிட்டியில் அமைந்துள்ள மன்/புத்/ றிஷாத் பதியுதீன் பாடசாலையின் வருடாந்ந இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றையதினம் அதிபரின் தலைமையில் நடைபெற்று முடிந்தது

இன் நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சருமான அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் நவவி. அவர்களும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் Dr.இல்லியாஸ் அவர்களும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி புத்தளம் மாவட்ட அமைப்பாளர் கௌரவ அலி சப்ரி. அவர்களும் ஓய்வுபெற்ற மன்னார் வலய கல்விப் பணிப்பாளர் சியான் அவர்களும் வட மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் றிப்ஹான் பதியுதீன் அவர்களும். ஜனுபர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்

இல்ல விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவவிக்க பட்டது

பாடசாலைக்கு உதவி செய்ய முன்வந்த அரசிய பிரமுகர்கள் கீழ்வரும் உதவிகளை செய்ய முன்வந்தார்கள்

01.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சருமான அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்கள் மன்/புத்/றிஷாத் பதியுதீன் பாடசாலையின் மாணவியாக இருந்த மர்ஹுமா அப்லா (Afla) அவர்களின் ஜன்னத்துல் பிரதௌஸ் எனும் சுவன வாழ்வுக்காக முப்பது இலட்சம் ரூபாயை பாடசாலை ஆரம்ப கட்டிட வேலைக்காக தருவதாக கூறினார்

02.புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி அவர்கள் பாடசாலைக்கு தேவையான இசைக்கருவிகளை தருவதாக கூறினார்

03.பாடசாலைக்கு ஐந்து இலட்சம் ரூபா பணத்தை வட மாகாண சபை நிதியில் இருந்து தருவதாக வட மாகாண சபை உறுப்பினர் றிப்ஹான் பதியுதீன் கூறினார்

04.பாடசாலைக்கு ஐந்து இலட்சம் ரூபா பணத்தை மாகாண சபை நிதியில் இருந்து தருவதா வட மாகாண சபை உறுப்பினர் ஜனுபர் கூறினார்






-முஹம்மட் சப்ராஸ் (புத்தளம் செய்தியாளர்)


Related

Local 6286680595376864661

Post a Comment

emo-but-icon

item