பிறை விவகாரமும் அதற்கான ஒரே தீர்வும் (Must Read & Share)

By: SL Youth Muslim Organization

கடந்த வருடம் ரமளானின் கடைசிப் பத்து நான் மஸ்ஜிதில் இஃதிகாப் இல் தங்கி இருக்கும் சமயம் அதே பள்ளியில் எம்மோடு இஃதிகாப் இருந்த ஒரு பாடசாலை மாணவன் பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னால் என்னிடம் வந்து எனக்கு முன்னால் இருந்து கொண்டு அழுகின்றான் ...

நான் அவனிடம் எதற்காக அழுகின்றாய் என்று கேட்டேன்...

அவன் சற்று அழுகையை நிறுத்தி விட்டு – ஹஸ்றத் நான் பெருநாளைக்கு வீட்டுக்கு போவதை நினைத்து அழுகின்றேன். ஏனெனில் பெருநாள் என்றால் பலருக்கு சந்தோசமாக இருக்கும் ஆனால் என்னை பொறுத்த வரை எங்கள் வீட்டில் அது ஒரு போர்கள நாள் என்றுதான் சொல்ல வேண்டும்.ஏன் என்று வினவினேன்.

அந்த மாணவன் கூறினான் – ஹஸ்றத் எங்களது வீட்டில் எனது உம்மாவும் எனது மூத்த நானாவும்,இன்னொரு சகோதரியும் எமது நாட்டு பிறையை வைத்து பெருநாளை கொண்டாடுவார்கள், ஆனால் எனது வாப்பாவும், எனது இளைய இரண்டு நாநாமார்களும் சர்வேதேசத்தின் அடிப்படையில் பெருநாள் கொண்டாடுவார்கள்.

எங்கள் வீட்டில் வாப்பாவும் நாநானாமாரும் பெருநாள் தொழுதுவிட்டு வருவாங்க எங்க உம்மா நோன்போடு இருப்பாங்க .... எங்க குடும்பத்தில் ஆசையாக எங்கள் குடும்பம் சந்தோசமாக பெருநாள் என்று ஒன்றாக ஆடை அணிந்து ஒன்றாக பெருநாள் தொழுகைக்கு சென்று, ஒன்றாக பெருநாள் அன்று சந்தோசமாக சாப்பிடும் காலம் வராதா என்று அல்லாஹ்விடம் சவுதியிலும் இலங்கையிலும் ஒரு நாளே பிறையை தெரிய வைத்து விடு யா அல்லாஹ் என்று துஆ செய்வேன்...

ஒவ்வொரு ரமழானிலும் எங்க குடும்பத்தில் பிரச்சினைதான் ...இந்த முறை வீட்டுக்கு போனால் என்னன்னா பிரச்சினை நடக்க போகுதோ,பேசாமல் பெருநாளையும் பள்ளில சந்தோசமாக கொண்டாடி விட்டு வீட்டுக்கு போவோமா என்று யோசிக்கின்றேன் ஹஸ்ரத் என்று கண்ணீர் மல்க சொல்லி முடித்தான்....

(இது இலங்கையின் தலை சிறந்த ஒரு உலமா அவரது அனுபவத்தை பகிர்ந்த போது) இது ஒரு நிகழ்வாக இருந்தாலும் , இந்த பிறை பிளவினால் தலாக்கிற்கு சென்ற புது தம்பதியினரின் சோக வரலாறு, வெளிநாட்டில் இருந்து பெருநாளை முன்னிறுத்தி வந்த சகோதரர் குடும்பத்தில் ஏற்பட்ட பிறை பிளவினால் இனி பெரு நாளைக்காக நாட்டுக்கு வரவே மாட்டேன் என்று சத்தியம் இட்டு சென்ற வரலாறு என்று இலங்கையில் நடை பெற்ற பல நிஜ சோக கதைகளை சொல்லிக் கொண்டே போகலாம் ...ஆனால் கதை சொல்வது எம் நோக்கம் அல்ல ...விடயத்துக்கு வருகின்றோம்

எம் அன்பிற்குரிய இஸ்லாமிய உள்ளங்களே இங்கு நாம் பல விடயங்களை உள் வாங்க வேண்டி உள்ளது. உண்மையில் நபியவர்களின் காலத்தில் ஏகதுவத்துக்காக குடும்பங்கள் பிரிந்தது , சண்டைகள் ஏற்பட்டது, தலாக்குகள் நடை பெற்றது உண்மைதான்.... எவ்வாறாயினும் குடும்பதுக்காகவோ, சூழலுக்காகவோ சத்திய மார்க்கத்தை விட்டுக் கொடுக்க முடியாது. ஆனால் அந்த சம்பவங்களை முன்னுதாரணம் வைத்து இன்று இந்த குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் கருத்து வேறுபாட்டுக்கு இடம்பாடு உள்ள இந்த பிறை விவகாரத்தில் முரண்பட்டுக் கொள்வது ஒரு போதும் தூய இஸ்லாத்தை அழகாக, ஆழமாக புரிந்தவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாம் இங்கு சுட்டிக் காட்டும் விடயம் யாதெனில் மாதம் , நோன்பு மற்றும் பெருநாளை தீர்மானிக்கும் விடயத்தை பொறுத்த வரை இஸ்லாமிய சட்ட துறையில் குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் இன்று பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

பொதுவாக உள் நாட்டு பிறைக்கு பல ஆதாரங்கள் முன் வைக்கப்படுகின்ற அதே நேரத்தில் ஒரு சில விமர்சனங்களும் முன் வைக்க பட்ட நிலையிலும், சர்வேதேச பிறைக்கும் ஆதாரங்கள் முன் வைக்க பட்ட போதும், அதிலும் பல நடைமுறை சாத்தியமற்ற விமர்சனங்கள் முன் வைக்க படுகின்ற நிலையிலும் (குறிப்பு – எமது கருத்தை ஏற்க முடியாதவர்கள் இணைய தளத்தில் சென்று இது தொடர்பாக குரான் ஹதீஸின் ஒளியில் அனைத்து மொழிகளிலும் கொஞ்சம் நிதானமாக படிக்கவும்,)...

மேற்சொன்ன இரு பொதுவான நிலைப்பாடுகளிலும் உள்நாட்டு பிறை உலகின் பல இடங்களில் அமுலில் உள்ள நிலையிலும் சில நாடுகளில் சர்வேதேச பிறை அமுலில் உள்ள நிலையிலும் பொதுவாக உலகின் பெரும்பான்மை உலமாக்களும், இஸ்லாமிய வழிகாட்டல் நிலையங்களும் இன்றைய சூழலில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் “அந்தந்த நாட்டின் தலைமைகளின் பணிப்பின் கீழ் பிறை விவகாரத்தில் முஸ்லிம் சமூகம் ஒன்று படுவதே” இந்த குழப்பத்துக்கு ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டை முன் வைத்துள்ளார்கள்...

உலகின் தலை சிறந்த மார்க்க அறிஜர்களினதும், இஸ்லாமிய பலம் வாய்ந்த அமைப்புகளினதும், உலக முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியத்தினதும் ஏகோபித்த முடிவும் இதுவே. எனவே நாமும் அந்த நிலைப்பாட்டையே வரவேற்கின்றோம். எமது நாட்டை பொறுத்த வரை சில நிறை குறைகள் முன் வைக்கப்பட்டாலும் பொதுவாக ஆரம்ப காலம் தொட்டு அனைத்து இயக்கங்களையும் உள்வாங்கி சராசரி இருபது லட்சம் முஸ்லிம்களின் மார்க்க தலைமை நிறுவனமாக செயற்பட்டு வரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முடிவை (பல வருடம் இந்த பணியை செய்து வரும் கொழும்பு பெரிய பள்ளிவாயலின் உதவியோடு) முழு இலங்கை முஸ்லிம்களும் ஏகோபித்த நிலையில் ஏற்று அமுல் படுத்துவதன் மூலம் நோன்பு, மற்றும் பெருநாட்கள் மூலம் இஸ்லாம் எதிர்பார்க்கும் விழுமியங்களை எம் சமூகம் அடைய முடியும் என்பதுவே முஸ்லிம் சமூகம் வரவேற்கத்தக்க ஒரே நிலைப்பாடாகும்.

மேலும் பிறை விடயத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிற்கு கடந்த காலத்தில் சில விமர்சனங்கள் முன் வைக்க பட்டாலும், தற்போது அவைகள் பல கலந்துரையாடல்கள் மூலம் மேலும் தீர்க்கமான பல முடிவுகள் எடுக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் முடிந்தளவு ஆரோக்கியமாக பிறை விடயத்தை கையாள்வதற்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா முன் வந்துள்ள நிலையில் நாம் மேலும் மேலும் முரண்பட்டு பிரிந்து குர்ஆன் சுன்னாவின் ஒளியில் மாற்று கருத்துக்கும் இடம் பாடு உள்ள இந்த பிறை விவகாரத்தை நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவதுக்காக கையாண்ட தஃவா முறையை இங்கு முன்வைத்து பிரச்சாரம் செய்து சமூகத்தை குழப்பத்திலும் பிரிவினையிலும் உட்படுத்துவது பலவீனமான செயல் என்பதை பகிரங்கமாக முன் வைக்கின்றோம். நாட்டின் அனைத்து இயக்கங்களும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த விடயத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கீழ் ஒன்று பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

அனைத்து இலங்கை முஸ்லிம்களுக்கும் ஒரு அன்பான அறிவுரை – நோன்பு மற்றும் பெருநாள் என்பது குடும்பங்கள், உறவினர்கள் சந்தோசமாக ஒற்றுமையாக வர வேட்க வேண்டிய வணக்கங்கள் ....இந்த நாட்களிலும் நாம் பிரிவினை பட்டு சண்டையிட்டு குடும்பத்தின் நிம்மதியை , சந்தோசத்தை இழப்பதை விட்டு விட்டு நீங்கள் எந்த இயக்கத்தில், மாற்று கருத்தில் இருந்தாலும் பிறை விவகாரத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கீழ் ஒன்று பட்டு முழு நாடும் ஒரே தினத்தில் நோன்பை , பெருநாளை சந்தோசமாக வரவேற்போம்...

எமக்கு உள்ளதே இந்த இரண்டு பெரு நாட்களே அதிலும் ஏன் இந்த குழப்பமும், சண்டையும் , சச்சரவும் - ஒன்று படுவோம் அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்தவர்களாக....

எமது இந்த ஆக்கத்துக்கு சில விமர்சனங்கள் வரலாம் இருந்த போதும் நாம் அல்லாஹ்வின் திருப்தியை நாடி சமூகத்தின் ஒற்றுமையை நாடியே இதை பகிர்கின்றோம். எனவே ஒற்றுமையை நோக்கிய இந்த பயணத்தில் அல்லாஹ் எமக்கு உதவி செய்வானாக ....


Related

Articles 4109207248451738597

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item