தென் கிழக்கு அலகு கரையோர மாவட்டம் பக்கம் திரும்பியது ஏனோ..?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்சவின் தோல்வியோடு அரசியலில் பேச்சுக்களில் இருந்து மௌன விரதம் காத்த முன்னாள் அமைச்சரும் மு.கா வின் தவிசாளருமான பசீர் சேகு தாவூத் அவர்கள் தனது மௌன விரதத்தினைக் கலைத்து வீர வசனங்களினை பேச ஆரம்பித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் தோல்வியின் பிற்பாடு மௌன விரதத்தினைக் கடைப் பிடிக்காது தனது செயற்பாடுகளிற்கு உடனே நியாயம் கற்பிக்க விளைந்திருந்தால் அது அவரினை மக்கள் அதீதம் தூற்றி தூக்கி எறிய காரணமாக அமைந்திருக்கும்.அவரின் மௌனம் அவரின் செயற்பாட்டினை மறக்கடிக்கச் செய்துள்ளதாய் நினைத்து மீண்டும் தனது சதுரங்க ஆட்டத்தினை ஆட தயாராகியுள்ளார்.

தனது சதுரங்க ஆட்டத்தின் முதற் கட்டமாக கரையோர மாவட்டக் விவகாரத்தினை தற்போது கையில் எடுத்துள்ளார்.சாதராணமாக பார்க்கும் போது இவரின் குரல் கொடுப்பில் உண்மை இருக்கின்றதோ இல்லையோ நன்மை உள்ளது என நினைத்தாலும் இதில் இவர் சாதிக்க விளையும் விடயம் தான் என்ன? என்பதனை நாம் சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கின்றோம்.

ஆகஸ்ட் 3ம் திகதி மு.கா இனுடைய தவிசாளர் அமைச்சர் பசீர் சேகு தாவூத் தன்னுடைய “சோர்விலாச் சொல்” புத்தக வெளியீட்டு நிகழ்வில் “கரையோர மாவட்டம் முஸ்லிம்களின் தேசிய பிரச்சனைக்குத் தீர்வல்ல” எனக் குறிப்பிட்டிருந்தார்.இதற்காக ஆட்டளைச்சேனை பிரதேச சபையில் இவரிற்கு எதிராக கட்டணப் பிரேரணை கூட நிறைவேற்றப்பட்டிருந்தது.இதன் பிற் பாடு இவ்விடயம் அதீத விமர்சனத்திற்கு உள்ளாக தென் கிழக்கு அலகே முஸ்லிம்களின் பிரச்சினைக்குத் தீர்வு என தன் மீதான விமர்சனங்களிக்கு நியாயம் கற்பிக்க விளைந்தார்.எனவேஇதிலிருந்து நாம் தெளிவாக இவரினது கருத்தினை நோக்கினால் ,இப்போது இவர் கரையோர மாவட்டம் கோருவது தனது தனிப்பட்ட சுயனலதிற்காக என்பதனை அறியலாம்.

இவர் எதிர் வருகின்ற தேர்தலில் மக்களிடம் செல்ல வேண்டுமாக இருந்தால் தனது செயற்பாடுகளிற்கு தகுந்த சில நியாயங்களினை முன் வைத்தாக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்.வில்பத்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்து ஆடிக் கொண்டிருக்கின்றது.இவ் வில்பத்து விவகாரத்தில் பேரின வாதிகளிற்கு சார்பாக ஜனாதிபதி மைத்திரி கூட தனது பேச்சினை அமைத்து வருகின்றார்.இதன் காரணமாக பேரின மக்கள் முஸ்லிம் மக்கள் மீது ஒரு கடும் பார்வை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ் வேளையில் “பிரபாகரன் தனி ஈழம் கோருவது போன்று அமைச்சர் ஹக்கீம் கரையோர மாவட்டம் கோருகிறார்” என வர்ணிக்கப்பட்ட இக் கரையோர மாவட்டத்திற்கு தற்போதைய ஜனாதிபதி இச் சந்தர்ப்பத்தில் இணங்கினால் அது தற்போதைய ஜனாதிபதிற்கு பாரிய எதிர் விளைவினை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லைஎனவே,மிக விரைவில் பாராளுமன்றத் தேர்தல் இலங்கை மக்களினை எதிர் நோக்கி இருப்பதால் பெரும் பான்மை மக்களினை சிறிதேனும் எதிர்க் காமல் அரசு நடை பயில .நிச்சயம் எக் காரணம் கொண்டும் கரையோர மாவட்டத்தினை ஜனாதிபதி வழங்க மாட்டார் என்பது உறுதியான உண்மை.இதனை முன்னாள் அமைச்சர் பசீர் அறியாதவரும் அல்ல.

எனவே,வில்பத்து விவகாரத்தில் வில்லனாக மாறியுள்ள ஜனாதிபதியிடம் தான் ஜனாதிபதியாகி முதன் முறையாக பலத்த மக்கள் எதிர்பார்ப்போடு இக் கோரிக்கையும் சென்று பூச்சியமாய் திரும்பும் போது அது மைத்திரி மீதான முஸ்லிம்களின் அதிருப்திக்கு காரணமாக மையும்.அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் அதிருப்திக்குள்ளாகும் .இது மைத்திரியினை ஆதரிக்காது மௌனித்த முன்னாள் அமைச்சர் பசீரிற்கு தனது செயற்பாடுகளிற்கு நியாயம் கற்பிக்க ஏதுவான காரணியாக மாறும்.இதனை நோக்காக கொண்டு நடாத்தும் ஒரு சதுரங்க ஆட்டமாகவே இதனை நோக்கலாம்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்


Related

Articles 2564124408547488879

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item