நான் வந்ததும் முன்கதவால், செல்வதும் முன்கதவால்தான்-பிரதமர்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_66.html
தனக்கு எதிராக எதிர்க் கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம்கொடுக்க தான் எப்போதும் தயார் எனவும், பிரதமர் பதவிக்கு தான், பின்கதவால் வந்தவர் அல்ல எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நான் வந்ததும் பின்கதவால் அல்ல, செல்வதும் முன்வாசல் வழியாகவே எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனக்கும், எனது கட்சிக்கும் முதுகொலும்பு பலமாகவுள்ளது. என்னைத் தகுதியில்லையெனக் கருதினால் விலக்குங்கள். எதிர்க் கட்சியில் இருக்க நான் தயார் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
-dc
