சியாம் படுகொலை : வாஸ் பிணையில் விடுதலை
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_80.html
தொழிலதிபர் சியாம் படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உட்பட்ட ஐவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழுமம் இவர்களை பிணையில் விடுவித்தது.
தலா ஒவ்வொருவரும் ஐந்து இலட்ச ரூபா ரொக்கம் மற்றும் 10 இலட்ச ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
-dc
