க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போடப்படலாம்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_646.html
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை ஆண்டுதோறும் ஓகஸ்ட் மாத முற்பகுதியில் இடம்பெறுவது வழக்கம். ஆனால் இவ்வருடம் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக க.பொ.த உயர்தரப் பரீட்சையை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், க.பொத உயர்தரப் பரீட்சை குறித்த முடிவை கல்வி அமைச்சு அறிவிக்கும் என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.
