ஐந்து கோடி பெறுமதியான தங்கம் கட்டுநாயக்கவில் சிக்கியது
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_62.html
சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் வந்த பெண் கணக்காளர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் சுமார் 10 கிலோ கிராம் எடை கொண்டது எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் டுபாயில் இருந்து வரும் வழியிலேயே கைதாகியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
