சாகசத்தின் போது இரண்டு விமானங்கள்மோதி கடலில் விழுந்தன- வீடியோ
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_38.html
இத்தாலியில் விமான சாகசத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு சிறிய ரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விழுந்ததில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார். பார்வையாளர்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த வேளையே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இரண்டு விமானங்களும் அருகருகே பறந்து கொண்டிருந்த போது ஒரு விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக அடுத்த விமானத்தின் மீது விழுந்துள்ளது.இதனாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான வீடியோவைக் கீழே காணலாம்.
