ஸாகரிக்கா இடை வழியில் நின்றது - கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_22.html
மாத்தறையில் இருந்து மருதானை நோக்கிப் புறப்பட்ட ஸாகரிக்கா கடுகதிப் புகையிரதம் இரத்மலானை புகையிரத நிலையத்தில் வைத்து தொழினுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அதன் பின்னால் வந்த பாணந்துறை-மருதானைப் புகையிரதம் பயணத்தை மேற்கொள்வதில் சிக்கலை எதிர் நோக்கியது. இரத்மலானை வந்த மேற்படி புகையிரதம் மீண்டும் மொரட்டுவைக்கு வந்து அடுத்த தண்டவாளத்தினூடாக பயணத்தை தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஸாகரிக்கா புகையிரதம் காணப்படும் தண்டவாலத்தில் தொடர்ந்தும் பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
