50 ஆயிரம் தேனீக்கள் கொட்டியும் உயிர் பிழைத்த தொழிலாளி- அமெரிக்காவில் சம்பவம்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/50_16.html
அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள கிங்மேன் என்ற இடத்தில் தொழிலாளி ஒருவர் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.
எதிர்பாராதவிதமாக அங்கு வளர்க்கப்பட்ட 5½ அடி உயர தேன் கூட்டை இடித்து விட்டார். இதனால் கோபம் அடைந்த தேனீக்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஆத்திரத்தில் கொட்டித் தீர்த்தன.
அந்த கூட்டில் மொத்தம் 50 ஆயிரம் தேனீக்கள் இருந்தன.
தகவல் அறிந்ததும் தேனீ பராமரிப்பவர் அங்கு விரைந்து வந்து அவரை காப்பாற்றினர்.
இதற்கிடையே தேனீக்கள் கொட்டியதால் படுகாயம் அடைந்த தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து அவர் உயிர் பிழைத்தார். தற்போது அவரது நிலைமை சீராக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
-MM
