பாகிஸ்தானில் அனல் காற்றால் உயிரிழந்தவர்கள் தொகை 650 ஆக உயர்வு
http://weligamanewsblog.blogspot.com/2015/06/650.html
தென் பாகிஸ்தானில் கடந்த 3 நாட்களாக வீசிய அனல் காற்றில் சிக்கி பலியானவர்கள் தொகை 650 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து தென் சிந்து மாகாணத்தில் அவசரகால நிலைமையொன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி அனல் காற்றால் பாதிக்கப்படவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகார சபைக்கு பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.
அனல் காற்று வீசி வரும் பிராந்தியங்களில் இராணுவத்தினரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அனல் காற்றால் உயிரிழந்தவர்களில் அநேகர் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்க ளைச் சேர்ந்த வயோதிபர்களாவர்.
உயர் வெப்பநிலை நிலவும் கராச்சி நகரிலேயே அதிகளவு மரணங்கள் இடம்பெற்றுள்ளன. அங்கு 45 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த அனல் காற் றால் நூற்றுக்கணக்கானோர் உடல் நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகி துன்பப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மின் துண்டிப்புகள் மேற்கொள்ளப்படாது என அறிவித்துள்ள போதும் ரமழான் நோன்பு காலத்தில் பகல் பொழு தில்கடும் வெப்பத்தைத் தணிவிக்க குளிரூட்டிகளின் பாவனை அதிகரித்துள்ளதால் மின்சார பற்றாக்குறை காரணமாக மின் துண்டிப்புகளை தவிர்க்க முடியாதுள்ளதாக கூறப்படு கிறது.

