40 வருடங்களுக்குப் பிறகு பெற்ற மிகப்பெரிய வெற்றி
http://weligamanewsblog.blogspot.com/2015/06/40.html
நியூசிலாந்துக்கு எதிராக 9 விக் கெட் இழப்புக்கு 408 ஓட்டங் கள் குவித்து ஒருநாள் போட்டியில் அந்த அணியின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.
இதற்கு முன்பு 2005ஆம் ஆண்டு பங்களாதேஷிற்கு எதிராக 4 விக்கெட் இழப்புக்கு 391 ஓட்டங்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.
மேலும் இந்த ஆட்டத்தில் 210 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
40 ஆண்டு கால இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் இது தான் மிகப்பெரிய வெற்றியாகும்.
இதற்கு முன்பு 1975 ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 202 ஓட்டங்களில் (60 ஓவர் போட்டி) வென்றதே அந்த அணியின் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.
அதற்கு பிறகு 1992 இல் பாகிஸ்தானுக்கு எதிராக 198 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது. தற்போது 2ஆவது முறையாக 200 ஓட்டங்களுக்கு மேலான வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
-vk

