மருதானையில் தீ விபத்து - மூவர் மரணம்

கொழும்பு மருதானையில் கலீல் தனியார் வைத்தியசாலைக்கு அருகில் இரண்டு வியாபார நிறுவனங்களில் தீ ஏற்பட்டதில் 3 பேர் மரணமாகியுள்ளனர். மரணமானவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளனர்.

இன்று பகல் 1 மணியளவில் பரவிய இந்தத் தீ 4 தீயணைப்பு வாகங்களின் உதவியுடன் சற்று முன்னர் அணைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகல் தெரிவிக்கின்றன.

மரணமானவர்களின் உடல்கள் தேசிய வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களது பெயர் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

தீயிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.


Related

Popular 1727858879727700942

Post a Comment

emo-but-icon

item