அம்பியூலன்ஸ் வண்டியில் இருந்து எரிபொருள் திருடிய இருவர் கைது
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_949.html
தம்புள்ள ஆரம்ப வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டியில் இருந்து எரிபொருள் திருடிய இருவரைப் பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர்.
குறித்த திருட்டு பற்றி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் படி நேற்று இரவு 11.10 மணியளவில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அம்பியூலன்ஸ் வண்டியின் உதவியாளரும் பஸ் வண்டி ஒன்றின் உரிமையாளரும் ஆவர்.
