முன்னாள் அமைச்சர்களிடம் இன்னும் அரச வாகனம்-ராஜித
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_889.html
கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகித்த பலர் இன்னும் தமது பொறுப்பின் கீழ் இருந்த வாகனங்களை ஓப்படைக்காதிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த வாகனங்களை உடனடியாக பெற்றுக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி தன்னிடம் கோரியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார். (DC)
