பயங்கரவாதம் தலை தூக்க ஒரு போது இடமளிக்கப்படமாட்டாது - ஜனாதிபதி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_874.html
பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்குவதற்கு நான் ஒருபோதும் இடமளியேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
போருக்கு பின்னரான காலத்தில் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பௌதீக வளங்களை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மாத்தறையில் நடைபெற்ற 6ஆவது வெற்றிவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவருவதற்காக முன்னின்று உழைத்த அரச தலைவர்கள் சகலரையும் தான் மதிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
