பொலிஸ் பொறுபதிகாரிகள் 12 பேருக்கு இடமாற்றம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/12.html
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 12 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
சேவையின் அவசியம் கருதி, பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் குறித்த அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குளியாபிட்டி, மோதரை, கொட்டாஞ்சேனை, கொம்பனி வீதி, மாங்குளம், தலைமன்னார், நாரம்மல, கொபேய்கனே, பன்வில மற்றும் குருநாகலை ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், கண்டி பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
