ஹக்கீமிடமிருக்கும் அமைச்சை பௌத்தர் ஒருவரிடம் வழங்குக
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_745.html
புனித தலங்களுக்கு ஆபத்து என்கிறது பொது பல சேனா
நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பௌத்த புனித ஸ்தலங்கள் அமைந்திருப்பதால் நகரங்களின் அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சர் ஹக்கீம் பௌத்த நிலையங்களின் காணிகளை கையேற்றுக் கொள்ளலாம் என பொதுபலசேனா அச்சம் தெரிவித்துள்ளது.
கிருலப்பனை பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற பொதுபலசேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அதன் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் மேற்கண்டவாறு அச்சம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
பல நகரங்களில் பௌத்த நிலையங்களும், விகாரைகளும், புனித பூமிகளும் அமைந்துள்ளன. நகரங்களின் அபிவிருத்திக்குப்பொறுப்பான அமைச்சராக முஸ்லிம் ஒருவர் இருப்பது பௌத்ததுக்கும் ஆபத்தானதாகும். பௌத்த காணிகள் வேறு தேவைகளுக்காக கையேற்றுக் கொள்ளப்படலாம்.
எனவே நகர அபிவிருத்தி அமைச்சு பௌத்தர் ஒருவருக்கு வழங்கப்படவேண்டுமென ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளோம். ஜனாதிபதி எமது கோரிக்கையை நிறைவேற்றுவர் என்ற நம்பிக்கையுண்டு என்றார்.
