அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பதற்ற நிலை
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_714.html
துறைமுகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்ய வந்தவர்கள் பொலிஸாரின் வாகனம் மீது கல் எறிந்ததாலேயே பதற்ற நிலை தோன்றியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் ஜீப் வண்டி ஊழியரொருவரின் காலில் ஏறியுள்ளது.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் வண்டிமீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதன்பின்னரே அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
காலில் காயபட்ட ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

