ஆணையாளர் நியமனத்தினை ஏற்க முடியாது – நிமல்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_555.html
பிரதேச சபைகள், நகர சபைகள் உள்ளிட்டவற்றின் பதவிக் காலத்தை நீடிக்காமல் இருப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொள்ளாது. மட்டுமன்றி ஜனாதிபதியின் தீர்மானத்தை ஏற்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பதவிக் காலம் முடிவடைந்த உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நீடிக்கப்பட வேண்டுமென அமைச்சரவைக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தப்படும் வரையில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஆணையாளர்கள் நியமிக்கப்பட வுள்ளதாக ஜனாதிபதி அண்மையில் பயாகல பிரதேசத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நீடிக்கப்பட வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்
